search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா - 2 பேர் பலி

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 498 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4 ஆயிரத்து 585 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13 ஆயிரத்து 309 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 197 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டைச் சேர்ந்த 30 வயது நபர், சத்தியமூர்த்தி ரோட்டைச் சேர்ந்த 34 வயது பெண், பெரியபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த 30 வயது நபர், பெத்தனாச்சி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அல்லம்பட்டியைச் சேர்ந்த 52 வயது பெண், பெரியகிணற்று தெருவைச் சேர்ந்த 36 வயது பெண், கூரைக்குண்டுவைச் சேர்ந்த 30, 66 வயது நபர்கள், ரோசல்பட்டியைச் சேர்ந்த 50 வயது நபர், சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த 28 வயது பெண், 47, 39 வயது நபர்கள், பாரதிநகரை சேர்ந்த 23 வயது நபர், புனல்வேலி, ராஜபாளையம், முகவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர், காரியாபட்டியைச் சேர்ந்த 3 பேர், ஆண்டியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நீண்ட இடைவெளிக்குப் பின்பு விருதுநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று கொரோனாவுக்கு மாவட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன் தினம் 2,227 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வரை 4,585 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து விருதுநகர் பரிசோதனை மையத்தில் இருந்தே பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தற்போது கிராமப்பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் நோய் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×