என் மலர்
செய்திகள்
X
மரக்கன்று நடும் விழா- அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு
Byமாலை மலர்4 Oct 2020 5:34 PM IST (Updated: 4 Oct 2020 5:34 PM IST)
சங்கரன்கோவிலில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் பொதுநிதியில் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பில் பாட்டத்தூரில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
பின்னர் மீரான்சேட் காலனியில் அடர்வனம் அமைப்பதற்காக அங்கு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மேலும் 24 மனை தெலுங்கு செட்டியார் தொடக்கப்பள்ளியில் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் முருகசெல்வி, நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X