search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 169 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 169 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்தது. 1,314 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 165 பேர் கொரோனா தொற்றால் இதுவரையில் மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 66 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 1,286 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 614 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண், 22 வயதுடைய ஆண், 39 வயதுடைய ஆண், 68 வயதுடைய முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் நேற்று காஞ்சிபுரம் மாவடத்தில் 140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது. 597 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×