என் மலர்
செய்திகள்
கராத்தே தியாகராஜன் பா.ஜனதாவில் சேருகிறார்- எல்.முருகனுடன் சந்திப்பு
சென்னை:
முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசினார்.
காங்கிரசில் இருந்த கராத்தே தியாகராஜன் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
ரஜினி கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்த போது அவருடன் நெருக்கமாக இருந்தார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட அரசியல் செயல்பாடு பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
இந்த நிலையில்தான் தமிழக பா.ஜனதா தலைவரை சந்தித்து இருக்கிறார். அவர் பா.ஜனதாவில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் சேரும் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், குறிப்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை கட்சியில் இணைப்பதில் பா.ஜனதா ஆர்வம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடி 14-ந் தேதி சென்னை வருகிறார். அதற்குள் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.