search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் கோர்ட்டுகள் 8-ந்தேதி முதல் முழுமையாக செயல்பட ஏற்பாடு

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகள் வருகிற 8-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கோர்ட்டுகளில் விசாரிக்கப்படும் வழக்குகள் வழக்கமான நாட்களை விட பாதி அளவு எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி முதல் கோர்ட்டுகள் முழுமையாக செயல்பட அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த முறையில் கோர்ட்டுகளை முழுமையாக செயல்பட வைப்பது தொடர்பாக அந்தந்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆலோசித்து முடிவு செய்ய அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகள் வருகிற 8-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வக்கீல் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து கோர்ட்டுகள் முழு அளவில் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு கிருமிநாசினி வைத்து, உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது. அதுபோல் கோர்ட்டுக்கு வந்து செல்பவர்களுக்கு தனித்தனி பாதை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×