search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட 10 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட 10 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைவாக இருந்துள்ளது.

    இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதத்தில் இருந்து முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் டி.எஸ்.கே. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினத்தில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் சேர்த்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இதற்கிடையே 100 பணியாளர்களுக்கு மேல் இருக்கிற தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தங்களது பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 10 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி தேவைப்படுகிற ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சுகாதாரத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×