என் மலர்
செய்திகள்
X
பிப்.8 முதல் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரி செயல்படும்- அரசாணை வெளியீடு
Byமாலை மலர்5 Feb 2021 9:53 AM IST (Updated: 5 Feb 2021 1:45 PM IST)
இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிப்.8 முதல் திறக்கப்படும் கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story
×
X