என் மலர்
செய்திகள்
X
ஆவின் பால் விலை குறைப்பு
Byமாலை மலர்16 May 2021 1:02 PM IST (Updated: 16 May 2021 1:02 PM IST)
திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றின் விலையானது ரூ.47 ல் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44-க்கும், நிறைகொழுப்பு பால் லிட்டர் ஒன்றின் அதிகபட்ச விலையான ரூ.51-ல் இருந்து ரூ.48 ஆகவும் விலை நிர்ணயம் செய்து இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆவின் பாலை வாங்கி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X