என் மலர்
செய்திகள்
X
பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே காயவிடும் விவசாயிகள்
Byமாலை மலர்24 May 2021 7:38 AM IST (Updated: 24 May 2021 7:38 AM IST)
ஊரடங்கால் திருப்பூரில் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே காயவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் தினசரி பறித்த பூக்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் சேவூர் பாளிக்காடு பகுதியை சேர்ந்த பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயி கூறியதாவது:-
மல்லிகைப்பூ, முல்லைபூக்கள் பயிரிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து 3-ம் ஆண்டு தொடக்கத்தில் தான் செடிகளில் பூ பிடிக்கும்.இப்பூவானது தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பறிக்கப்படும். பிறகு பகல் 1 மணிக்கு மேல் அனைத்து விவசாயிகளும் சேவூரிலிருந்து பஸ் மூலமாக திருப்பூரில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகிறோம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சந்தைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.விளைபொருளான பூ வகைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம்.மேலும் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே காயவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
Next Story
×
X