என் மலர்
செய்திகள்
X
தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்3 Jun 2021 12:18 PM IST (Updated: 3 Jun 2021 12:18 PM IST)
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்., 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க, மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. விரும்புவோர் வருகிற 20-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதள முகவரியை காணலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு போல் இந்தாண்டும் கொரோனா காரணமாக காணொலியில் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
X