என் மலர்
செய்திகள்
X
திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்படும்: தமிழக அரசு
Byமாலை மலர்3 Jun 2021 6:16 PM IST (Updated: 3 Jun 2021 6:16 PM IST)
ரேசன் அட்டைதாரர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், திருநங்கைகளுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணையான கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2-வது தவணையான தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் அட்டை உள்ள 2,966 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 11,449 திருநங்கைகளில் மீதமுள்ளவர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
X