என் மலர்
செய்திகள்
X
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை-உடுமலை புதிய டி.எஸ்.பி., பேட்டி
Byமாலை மலர்22 Jun 2021 3:23 PM IST (Updated: 22 Jun 2021 3:23 PM IST)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உடுமலை புதிய டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
உடுமலை:
உடுமலை போலீஸ் உட்கோட்டத்தில் (சப்-டிவிசன்) துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிக்குமார் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த தேன்மொழிவேல், உடுமலை துணைபோலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துணைபோலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் நிருபர்களிடம் கூறுகையில்:
உடுமலை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், ரவுடித்தனம் செய்கிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்கும் வகையில் போலீஸ் துறை செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X