என் மலர்
செய்திகள்
X
மடத்துப்பாளையம் சாலை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படுமா?
Byமாலை மலர்28 Jun 2021 12:54 PM IST (Updated: 28 Jun 2021 12:54 PM IST)
சாலையின் ஒருபுறம் மட்டும் கடைகள் வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் அங்கு நெரிசல் தவிர்க்கப்படும்.
அவிநாசி:
அவிநாசியில் பிரதான சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தும் பேரூராட்சியிடம் நிதியாதாரம் இல்லை.பேரூராட்சி பராமரிப்பில் உள்ள 200 மீட்டர் நீள மேற்கு ரத வீதி, ஒரு கி.மீ.,நீள மடத்துப்பாளையம்-சூளை இடைப்பட்ட சாலை ஆகியவற்றை பராமரிக்கும் பொறுப்பை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பது என கடந்த 2 ஆண்டுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில்:-
மேற்கு ரத வீதி, நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் 12 மீட்டர் அகலத்துக்கு அந்த சாலையை விரிவுப்படுத்தி சாலையின் ஒருபுறம் மட்டும் கடைகள் வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் அங்கு நெரிசல் தவிர்க்கப்படும்.தற்போது ஆக்கிரமிப்பால் இந்த சாலை 7 மீட்டர் அகலத்திற்கு சுருங்கியுள்ளது. மடத்துப்பாளையம்-சூளை இடைப்பட்ட சாலையை குறைந்தபட்சம் 7 மீட்டர் முதல் அதிகபட்சம் 15 மீட்டர் வரை அகலப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் ரிங் ரோடாக அதை பயன்படுத்தவும் முடியும் என்றனர். எனவே பேரூராட்சி தீர்மானத்தின் மீதான நடவடிக்கையை அரசு வேகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
X