search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ப்ரீபயர் கேம் விளையாடிய போது தகராறு-வாலிபரின் மண்டை உடைப்பு

    விளையாடி கொண்டிருக்கும் போது தகாத வார்த்தைகளால் திட்டியதால் சந்தோசை தாக்கியதாக தெரிவித்தனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). இவர் தனது ஸ்மார்ட்போனில் நண்பர்களுடன் ப்ரீபயர் கேம் விளையாடி கொண்டிருந்தார். அவருடன் நண்பர்களான ஆட்டோ ஓட்டுனர் அருண்பாஷா, மணிகண்டன், மோகன், பாலாஜி, கதிரவன் ஆகியோரும் சேர்ந்து விளையாடினர்.

    அப்போது விளையாட்டில் யார் வெற்றி பெறுவது என்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் வீட்டில் காலியாக இருந்த மதுபாட்டிலை எடுத்து சந்தோஷ் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் உடன் விளையாடி கொண்டிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக சந்தோஷ் பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அப்போது விளையாடி கொண்டிருக்கும் போது தகாத வார்த்தைகளால் திட்டியதால் சந்தோசை தாக்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நண்பர்களையும் தேடி வருகின்றனர். சண்டை விளையாட்டான ப்ரீபயர் கேம் விளையாடியபோது நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவரின் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×