என் மலர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே சேவல் சண்டை நடத்தியவர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 8:38 PM IST (Updated: 28 Jun 2021 8:38 PM IST)
தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜெயமங்கலம் பகுதியில் சேவல் சண்டை மூலம் சூதாட்டம் நடைபெறுவதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜெயமங்கலம் பகுதியில் சேவல் சண்டை மூலம் சூதாட்டம் நடைபெறுவதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜெயமங்கலம் அருகே பெரியகுளம்-வைகை அணை சாலையில் மலைப்பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் சேவல் சண்டை நடத்திய வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது பிலால் (வயது 40) மட்டும் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சண்டையில் பயன்படுத்தப்பட்ட 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X