என் மலர்
செய்திகள்
X
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 Jun 2021 3:04 PM IST (Updated: 29 Jun 2021 3:04 PM IST)
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பாக பல்லடம் மங்கலம் ரோடு, கொசுவம்பாளையம் ரோடு, அறிவொளி நகர், வடுகபாளையம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி உயர்த்தப்பட்ட கலால் வரிகளை குறைத்து விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுக்க வேண்டும். செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழக அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும். மத்திய உணவுத்தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலை இல்லாமல் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X