search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பாதிப்பு 300க்கு கீழ் சரிந்தது

    ஈரோடு, கோவை, திருப்பூரில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 1,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 294 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 81, 821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நேற்று 448 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து நலம் பெற்று 79, 235 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு, கோவை, திருப்பூரில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 1,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேர் தொற்றுக்கு பலியாகினர். இதனால் இதுவரை மாவட்டத்தில் 747 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    கடந்த 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தின் ஒரு நாள் தொற்று பாதிப்பு 400 முதல் 300 என்ற அளவில் தொடர்ந்தது. நேற்று 300 க்கு கீழ் குறைந்து 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
    Next Story
    ×