search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    திருப்பூர் மாநகராட்சியில் 25-ந்தேதி வரை வரி வசூலிக்கும் பணிகள் நிறுத்தம்

    இணையதளத்தில் 26-ந்தேதி முதல் வரியினங்களை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    மென்பொருள் பராமரிப்பு காரணமாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில  வரி வசூலிக்கும் பணிகள் நாளை மறுநாள் 25-ந்தேதி வரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
     
    சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் மென்பொருள் பராமரிப்புப் பணிகள் வரும் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன. ஆகவே, திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களிலும் உள்ள கணினி வரி வசூல் மையத்தில் அனைத்து வரியினங்கள், குத்தகை இனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி ஆகிய அனைத்து கட்டணங்களும் வசூலிக்கும் பணிகள் 25-ந்தேதி வரை நடைபெறாது. 

    இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் உள்ள இணையதளத்தில் 26-ந்தேதி முதல் வரியினங்களை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×