என் மலர்
செய்திகள்
X
குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது-கலெக்டர் பேச்சு
Byமாலை மலர்8 Aug 2021 1:34 PM IST (Updated: 8 Aug 2021 1:34 PM IST)
முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் டாக்டர்.எஸ்.வினீத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும்.
இதன் ஒரு பகுதியாக குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது.
மதிப்பற்றது.
முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முதன் முதலில் சுரக்கும் சீம்பாலில் கண்பார்வைக்கு தேவையான சக்தி அதிகம் உள்ளது. பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலம் கிடைக்கிறது.
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தண்ணீர் கூட தேவையில்லை. தாய்ப்பால் எளிதில் கிடைக்கக்கூடியது.விலை மதிப்பற்றது. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாக கூடியது.
புட்டிப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் குள்ளத்தன்மை, உடல் மெலிவுத்தன்மை, எடை குறைபாடு, குழந்தையின் இறப்பு விகிதம் போன்றவற்றை தடுக்க முடியு என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X