என் மலர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
Byமாலை மலர்8 Aug 2021 3:03 PM IST (Updated: 8 Aug 2021 3:03 PM IST)
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 327 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 236 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
X