என் மலர்
செய்திகள்
X
நேற்றைவிட சற்று குறைவு- தமிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்8 Aug 2021 7:35 PM IST (Updated: 8 Aug 2021 7:50 PM IST)
தமிழகத்தில் தற்போது 20,407 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
தமிழகத்தில் நேற்றைவிட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 1956 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 75 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 20,407 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,807 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 20 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
X