search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை தொடக்கம்

    கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஒப்பந்தம் போடப்படாமல் இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்., ரோடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இவை பின்னலாடை நிறுவனங்கள் வழங்கும் ஆர்டர் அடிப்படையில் ஆயத்த ஆடைகளை லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. 

    லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற சுமைப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிற்சங்கங்களும் சரக்கு போக்குவரத்து சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமை பணியாளர்களுக்கு கூலி உயர்வை நிர்ணயிக்கின்றன.

    கூலி உயர்வு ஒப்பந்தம் 2020ல் காலாவதியானது. கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஒப்பந்தம் போடப்படாமல் இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

    திருப்பூர் ராம்நகர் மூன்றாவது வீதியில் உள்ள பி.சி.சி., டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

    செயலாளர் சோமசுந்தரம், தொழிற்சங்கம் தரப்பில் சி.ஐ.டி.யு., ராஜகோபால், மணி, ஏ.ஐ.டி.யு.சி., சேகர், ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்கம் கண்ணப்பன், கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

    50 சதவீதம் கூலி உயர்வு வழங்க தொழிற்சங்கத்தினர் கோரினர். ஆனால் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க சரக்கு போக்குவரத்து சங்கத்தினர் முன்வந்தனர். தொழிற்சங்கத்தினர் இதை ஏற்கவில்லை. இதையடுத்து வருகிற 7-ந் தேதி மீண்டும் பேச்சு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×