search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    X
    இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை - கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் இருளர் இனத்தினர்

    அடையாள அட்டை இல்லாததால் தேர்தலில் இருளர் இனத்தினர் யாரும் வாக்களிக்கவில்லை மற்றும் கொரோனா நோய் தொற்று பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் கிடையாது.
    அரசிடம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் எவ்வாறு உதவிகேட்கவேண்டும் என்று தெரியாத வெகுளியான தமிழ் இருளர் பழங்குடியினமக்கள். 

    வட சென்னை எண்ணூர், அடுத்த காமராஜர் துறைமுகம் அருகாமையிலுல்ல காட்டுப்பள்ளில் 25க்கும்  மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் சுமார் 100 பேருக்கு மேல் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு  அரசு சார்ந்த எந்த ஒருவித அடையாள அட்டைகளான  ஆதார், வாக்காளர், ரேஷன் மற்றும் ஜாதி சான்றிதழ் உட்பட்ட எந்த ஒரு சான்றும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்கள்.

    பழங்குடி இருளர் இன மக்கள் அப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேல் இறால் மற்றும் நண்டு பிடித்து  தற்காலிக தார்பாலின் கூடாரம் அமைத்து தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வரும் இந்த சூழ்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிய  அவர்களுக்கு எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளும் கிடைக்க பெறவில்லை என்றும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இருளர் இன மக்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.

    அடையாள அட்டை இல்லாததால் தேர்தலில் இவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை மற்றும் கொரோனா  நோய் தொற்று பற்றிய எந்த ஒரு  விழிப்புணர்வும் கிடையாது. கொரோன நிமித்தம் அப்பகுதியில் வசிக்கும் சிறு பிள்ளைகள் இரண்டு ஆண்டு காலமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்பதால்  இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

    இன்னும் சற்று வேதனையான விஷயம் என்னவென்றால் அப்பகுதியில் இருக்கும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு இதுவரை தமிழக முதல்வரின் பெயர் என்ன என்று இன்னும் தெரியவில்லை. 

    இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    பின்னர் இவர்களின் இன்னல்களை  கேட்டறிந்த இந்திரா அறக்கட்டளை நிறுவனர் R. ரூபன் பொன்ராஜ், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இர.பு.அன்புச்செழியன். வழக்கறிங்கர்கள் பால்சுரேஷ், உமாசங்கர், சித்தார்த்,  தளபதிராஜா, Nobel Cause நிறுவனர்  V.R. ஜெயந்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து அப்பகுதி இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளான  பாலித்தின்- ஃபைபர் படகு (Fiber Boat,) தார்பாலின், அரிசி, போர்வை, பாய், பிரட் மற்றும் பிஸ்கட் போன்றவை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக முதல்வர் ஐயா தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பழங்குடி இருளர் சமூகமான தங்களுடைய வாழ்வாதாரத்தையும் , இப்பெருமழையின் பாதிப்புகளில் இழந்து தவிக்கும் அத்தியாவசிய தேவைகளையும், குழந்தைகளின் படிப்பையும் பூர்த்தி செய்து உதவுமாறு கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர்.
    Next Story
    ×