என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அலகுமலை கோவிலில் சஷ்டி விழா சிறப்பு பூஜை
Byமாலை மலர்11 Dec 2021 1:00 PM IST (Updated: 11 Dec 2021 1:00 PM IST)
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அலகுமலை பால தண்டபாணி முத்துக்குமார சுவாமி கோவிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
Next Story
×
X