search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2பேர் காயம்

    உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈசல்தட்டை சேர்ந்த 5 பேர் தேன் எடுப்பதற்காக அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றனர்.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, கோடந்தூர், மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் வசித்து வருகிறார்கள்.  

    இவர்களது பிரதான தொழில் விவசாயம் ஆகும். ஆனாலும் உபதொழிலாக தைலம் காய்ச்சுதல், தேனெடுத்தல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மலைவாழ் மக்கள் சாகுபடிபணி மற்றும் சுயதொழிலுக்காக வனப்பகுதிக்குள் செல்லும்போது வனவிலங்குகள் தாக்குவது தொடர்கதையாக உள்ளது.

    இந்தநிலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈசல்தட்டை சேர்ந்த 5 பேர் தேன் எடுப்பதற்காக அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளிப்பட்டு செந்தில் மற்றும் மகேஷ் ஆகியோரை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். 

    இதுகுறித்து மலைவாழ்மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன்பேரில் வனப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் செந்தில், மகேஷ் ஆகியோரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். காயமடைந்த இருவரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×