என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வினாடி-வினா போட்டியில் சாதனை- துபாய் செல்லும் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள்
Byமாலை மலர்13 Dec 2021 12:32 PM IST (Updated: 13 Dec 2021 12:32 PM IST)
வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் திருப்பூரை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்கள் துபாய் செல்ல தேர்வாகியுள்ளனர்.
திருப்பூர்:
கல்வித்துறை சார்பில் மாநில அளவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பாக பங்காற்றிய 89 பேர் அரசு சார்பில் துபாய்க்கு சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளனர்.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அம்மாபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பயிலும் ஜோதிமணி, உடுமலை கொங்கல் நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஹரன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று துபாய் செல்கின்றனர். இருவரையும் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Next Story
×
X