என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சமையலர், உதவியாளர்களுக்கு சமையல் போட்டி
Byமாலை மலர்13 Jan 2022 2:45 PM IST (Updated: 13 Jan 2022 2:45 PM IST)
அரியலூரில் வட்டார அளவில் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் 2021-& 2022 ஆம் ஆண்டிற்கு வட்டார அளவிலான சமையல் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளின்போது தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட சமையலர் மற் றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியினை கலெக்டர் பார்வையிட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகள் குறித்தும், செயல்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், சமையல் போட்டியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் சமையல் பணியாளர்களின் சீருடை, தோற்றம், உணவு தயாரிக்கும் முறைகள், உணவின் சுவை மணம், தரம், சத்துக்கள் மற்றும் சமையல் போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சமையலர் மற்றும் சமையல் உதவியாளரை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் 26.01.2022 குடியரசு தினத்தன்று மாவட்ட கலெக்டரால் வழங்கப்படவுள்ளது.
Next Story
×
X