என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஆல்கொண்டமால் கோவிலில் சலங்கை மாடுகளுடன் பக்தர்கள் வழிபாடு
Byமாலை மலர்20 Jan 2022 2:40 PM IST (Updated: 20 Jan 2022 2:40 PM IST)
ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவின் போது பக்தர்கள் கால்நடைகள், ஆண், பெண், பறவைகள் உருவம் கொண்ட உருவார பொம்மைகளை வாங்கி கோவிலில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
குடிமங்கலம்:
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலையொட்டி தமிழர் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழர் திருநாள் திருவிழா நடைபெறவில்லை.
ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சலங்கை மாடுகளுடன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
மேலும் கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருவதால் மாட்டுப்பொங்கன்று பிறந்த கன்றுகளை கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
பால் வளம் பெருகவும் கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் கால்நடைகளின் கறவைபாலைக் கொண்டுவந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து தீர்த்தமும் திருநீரும் பெற்றுச் செல்கின்றனர்.
ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவின் போது பக்தர்கள் கால்நடைகள், ஆண், பெண், பறவைகள் உருவம் கொண்ட உருவார பொம்மைகளை வாங்கி கோவிலில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கோவில் திறக்கப்படாத நிலையில் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் நேற்று சலங்கை மாடுகளுடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X