search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான மகன் மாது.
    X
    கைதான மகன் மாது.

    சொத்து தகராறில் தந்தை வெட்டி கொன்ற மகன் உள்பட 4 பேர் கைது

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தந்தையை கொன்ற மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அருகே எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது 75 ) இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மாள், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மகள் நாகம்மாள்  வீட்டில் வசித்து வந்தார். 

    முனியப்பனுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தை, மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முயன்றுள்ளார். இதற்கு அவரது மகன் கட்டிட மேஸ்திரி மாது (44) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி கடந்த வாரம்  1 ஏக்கர் நிலத்தை வேறு நபருக்கு விலை பேசி 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த மாது மற்றும் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர்களான  கட்டிட தொழிலாளிகள் மாரியப்பன் ( 33), பெருமாள் (42), மாதையன் (42) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 23&ந்தேதி   மதியம் வீட்டில் இருந்த தந்தை முனியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிசென்றனர். 

    இதுபற்றி தகவல் அறிந்த மாரண்டஅள்ளி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை  கைப்பற்றி தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை   தேடி வந்தனர்.

    இந்த நிலையில்  மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடி பஸ் ஸ்டாப்பில் குற்றவாளிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார் 4 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    சொத்திற்காக மகனே உறவினருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×