என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆஸ்பத்திரியை சூறையாடி கைது செய்யப்பட்ட சுஜித், அருண்கவி ஆகியோரை படத்தில் காணலாம். ஆஸ்பத்திரியை சூறையாடி கைது செய்யப்பட்ட சுஜித், அருண்கவி ஆகியோரை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203071430252582_Tamil_News_Pondicherry-News2-teenagers-arrested-for-looting_SECVPF.gif)
X
ஆஸ்பத்திரியை சூறையாடி கைது செய்யப்பட்ட சுஜித், அருண்கவி ஆகியோரை படத்தில் காணலாம்.
அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது
By
மாலை மலர்7 March 2022 2:30 PM IST (Updated: 7 March 2022 2:30 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருபுவனையில் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் சேகர். இவரதுமகன் சுஜித்(வயது26) இவரும் அதே பகுதியை சேர்ந்த அருண்கவி(26) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தாக கூறப்படுகிறது.
அவர்கள் திருபுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கிருந்து நர்சிடம் சிகிச்சை அளிக்க கூறினர். அதன்படி அவர்களுக்கு நர்சு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால் தங்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவர்கள் நர்சிடம் தகராறு செய்தனர்.
மேலும் அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி நர்சை தாக்க முயன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் பயந்து போன நர்சு தலைமை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் நடந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இன்று காலை ரகளையில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அருண்கவி ஆகிய இருவரும் கைது செய்தனர்.
Next Story
×
X