search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு பன்றிகள் மணிலா பயிரை சேதப்படுத்தியதை காண்பிக்கும் விவசாயி கோவிந்தன்.
    X
    காட்டு பன்றிகள் மணிலா பயிரை சேதப்படுத்தியதை காண்பிக்கும் விவசாயி கோவிந்தன்.

    காட்டு பன்றிகள் அட்டகாசம்-விவசாயிகள் வலியுறுத்தல்

    திருக்கனூர் பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமராபாளையம், வாதானூர்,     கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு  உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் விவசாயிகள் பல ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல், உளுந்து, மணிலா, மரவள்ளி  உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிர் செய்து வருகிறார்கள்.

    இந்த விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்து   வருகின்றன. 
    விவசாயிகள் பயிரிட்டு  உள்ள விவசாய பயிர்களை கடித்து சேதப்படுத்துகின்றன.இத னால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து குமாரபாளையத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன்  கூறியதாவது:-

    தற்போது கொரோனா வில் இருந்து மீண்டு வந்துள்ள சூழ்நிலையில்  கடன் வாங்கி  பயிர் செய்து வருகிறோம். 

    காட்டுப்பன்றிகளின் தொந்தரவால் எங்களால் நிம்மதியாக விவசாயம் செய்ய   முடியவில்லை.  காட்டுப் பன்றிகளால்    பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

    தற்போது நான் குத்தகைக்கு பயிர் செய்து வருகிறேன். அதில் சவுக்கை யுடன் ஊடு பயிராக மணிலா பயிர் செய்து வருகிறேன். காட்டுப்பன்றிகளால் மணிலா பயிர் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன.

    புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுத்து காட்டு பன்றிகள் கட்டுப்படுத்தவும் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாது காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×