search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மாட்டுவண்டி தொழிலாளர்கள் அதிகாரியிடம் முறையீடு

    குவாரி பணிகள் தொடங்கப்படாதது குறித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் அதிகாரியிடம் முறையிட்டனர்.
    கரூர்:

    மாட்டுவண்டி மணல் குவாரிகள் திறப்பு குறித்து அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 மாதம் ஆகி உள்ளது. இந்நிலையில் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

    ஆனால் கரூர் மாவட்டத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனகூறியும், அதற்கான பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் கரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள நீர்வளம் மற்றும் கனிம மேலாண்மை உதவி செயற்பொறியாளரிடம் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் கோரிக்கைகள் குறித்து முறையீடு செய்தனர்.

    பின்னர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு தஞ்சாவூரில் முற்றுகை போராட்டம் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. 

    கும்பகோணத்தில் ஒரு குவாரி செயல்பாட்டுக்கு கொண்டுவருதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் போர்ட்டல் திறந்தவுடன் உடனடியாக மணல் அள்ளுவதற்காக ஒரு நிலைமை வந்துவிடும். ஆனால் கரூர் போன்ற மாவட்டங்களில் அதற்கான பூர்வாக பணிகள் நடைபெறாமல் இருப்பது இன்னும் நம்முடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய சிரமங்களை உருவாக்கும். 

    கரூரில் ஏன் அந்த பணிகள் நடைபெறவில்லை என்பதை தெரிந்து கொள்வதற்காக இருக்கக்கூடிய உதவி செயற்பொறியாளரை சந்தித்து, குறைகளை சொல்லி இருக்கிறோம். அனுமதிக்காக அனைத்தும் அனுப்பப்பட்டு இருக்கிறது எனவும், 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என கூறியுள்ளார். இதில் தாமதம் ஏற்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×