என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வாரம்தோறும் அட்டைப்பெட்டி விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு
Byமாலை மலர்8 March 2022 12:57 PM IST (Updated: 8 March 2022 12:57 PM IST)
கிராப்ட் காகிதம் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. சாதாரண ரக காகிதம் டன் ரூ.42ஆயிரம். உயர் ரக காகிதம் டன் ரூ.52 ஆயிரத்தை எட்டியுள்ளது.
திருப்பூர்:
அட்டைப்பெட்டி உற்பத்திக்கு மூலப்பொருளான கிராப்ட் காகிதம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க, கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்தது.
சங்க தலைவர் திருமூர்த்தி, துணை தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது நிர்வாகிகள் கூறியதாவது:
கிராப்ட் காகிதம் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. சாதாரண ரக காகிதம் டன் ரூ.42ஆயிரம். உயர் ரக காகிதம் டன்ரூ.52 ஆயிரத்தை எட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் மட்டும் மூன்று முறை டன்னுக்கு ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.6,000 உயர்த்தப்பட்டுள்ளது. காகிதம் விலை வாரம்தோறும் உயர்த்தப்படுவதால் அட்டைப்பெட்டி விலையையும் சீராக தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. வரும் நாட்களில் காகிதம் விலைக்கு ஏற்ப அட்டைப்பெட்டி விலையும் வாரம்தோறும் உயர்த்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
X