என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
Byமாலை மலர்8 March 2022 1:29 PM IST (Updated: 8 March 2022 3:36 PM IST)
ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.
ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதையடுத்து விசாரணையில் சூடுபிடிக்க தொடங்கியது. இன்று நடைபெற்ற விசாரணையில், 2016, டிசம்பர் 4-ந்தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்டதாகவும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார்.
இதனிடையே, ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் சசிகலாவின் உறவினர் இளவரசியும் வரும் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... பாசமாக வளர்த்த நாய் இறந்ததும் கல்லறை கட்டிய ஆந்திர வாலிபர்
Next Story
×
X