என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குறுவளமைய பயிற்சி
Byமாலை மலர்8 March 2022 1:39 PM IST
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குறுவளமைய பயிற்சி நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி குறு வளமைய பயிற்சி பெரம்பலூர், எசனை, சிறுவாச்சூர், பொம்மனப்பாடி மற்றும் அம்மாபாளையம் ஆகிய குறுவளமையங்களிலும் தொடங்கியது.
பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகையில், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பள்ளியும், சமுதாயமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவ, மாணவியர்களின் கற்றல் செயல்பாடுகள் முன்னேற உதவ வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சுப்ரமணியன், ரமேஷ், கலைவாணன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் இலவசக்கட்டாய கல்வி உரிமைச் சட்டம்- 2009-&ன் நோக்கங்கள், அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும், பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசு அளிக்கும் நலத்திட்டங்கள்,
பள்ளி வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு பற்றியும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பெற்றோர்களின் கடமை, ஆசிரியர்களின் கடமை, பேரிடர் மேலாண்மைப் பற்றியும் விரிவாக செயல்பாடுகள் ஆகியவை குறித்து கானொலி காட்சிகள் விளக்கி கூறப்பட்டது.
பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், துணைத் தலைவர், நகராட்சி கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர், நலிவடைந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் என 385 பேர் கலந்து கொண்டனர்.

Next Story
×
X