என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி நிலம் மோசடி
Byமாலை மலர்8 March 2022 3:43 PM IST (Updated: 8 March 2022 3:43 PM IST)
புதுக்கோட்டையில் தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி, தொழிலதிபர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.
பின்னர் புதுக்கோட்டை நத்தம்பண்ணை பகுதியை சேர்ந்த நில புரோக்கர்கள் வேலுச்சாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 2004&ல் விற்பனை செய்ய பவர் பத்திரம் போட்டு கொடுத்தார்.
அதன்பின்னர் 3 மாதம் கழித்து கொடுத்த பவரை ரத்து செய்தார். ஆனால் இதனை மேற்கண்ட 3 பேரும் மறைத்து புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியை சேர்ந்த முகமது நஜிபுதீன், முகமது சாயம்பு ஆகியோருக்கு ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த முனியசாமி புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வேலுச்சாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம், சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபரின் ரூ. 1 கோடி நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
×
X