என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது
Byமாலை மலர்8 March 2022 4:01 PM IST (Updated: 8 March 2022 4:01 PM IST)
2 பேரிடம் இருந்த ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த 2 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அந்த 2 பேரிடம் இருந்த ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X