என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
இரவு நேரங்களில் பறக்கும் டிரோன்களால் பெண்கள் அச்சம்
Byமாலை மலர்8 March 2022 4:09 PM IST (Updated: 8 March 2022 4:09 PM IST)
பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடந்த ஒருவார காலமாக இரவு நேரங்களில் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், புஞ்சை தாமரைக்குளம், புளிப்பார் மற்றும் தத்தனூர் கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் வீடுகளின் மேற்பரப்பில் புகைப்படம் எடுப்பது போல் சுற்றி வருகின்றன.
அந்தப் பகுதியில் வசிக்கும் கிராமப்புறப் பகுதிகளில் வீடுகளில் உள்ள குளியறைகள், கழிப்பறைகள் மேல் கூரை இல்லாமல் வீடுகள் உள்ளன.
இவ்வாறு டிரோன் கேமரா இரவு முழுவதும் சுற்றி வருவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடந்த ஒருவார காலமாக இரவு நேரங்களில் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டிரோன் கேமராக்கள் கிராமப்புற பகுதிகளில் மேலே எதற்காக பறக்கிறது என உரிய விசாரனை செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பெண்கள் மனு அளித்தனர்.
Next Story
×
X