என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
Byமாலை மலர்7 April 2022 12:19 PM IST (Updated: 7 April 2022 12:19 PM IST)
குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரூர் :
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைவிதிக் கப்பட் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதை தடுக்கும் வகை யில் உணவு பாதுகாப் புத் துறையினர் கரூர் ஜவஹர்பஜார், வெங்கமேடு, வெள்ளியணை, லாலா பேட்டை, புன்னம், பஞ்சப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கரூர் பகுதியில் 5, புன்னம் பகுதியில் 2, லாலாபேட்டையில் 1 என மொத்தம் 8 கடைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 17.5 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக புகையிலை பொருட்கள் கண்டறிப்பட்ட சில கடைகளில் கலெக்டர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அவர்,
மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக் கைகளில் ஈடுபடுத்தப் படுவோர் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர். சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம் என்றார்.
ஆய்வின் போது ஏ.டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் த.கலைவாணி, கரூர் வட்டாட்சியர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story
×
X