என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெண் மர்ம சாவு
சாத்தூர் அருகே பெண் மர்மமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வி.மீனாட்சிபுரத்தை சேர்ந் தவர் வேலம்மாள் (வயது 55). இவர் தனது உறவினர் முருகன் என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வேலம்மாள் வீட்டின் திண்ணையில் இறந்து கிடப்பதாக முருகனுக்கு தகவல் வந்தது.
இயற்கை மரணம் என கருதிய முருகன் உடனே வீட்டுக்கு சென்று வேலம்மாள் இறுதி சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் இறந்துகிடந்த வேலம்மாளின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இது முருகனுக்கு சந்கேத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதில் வேலம்மாள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story