என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் திருவிழா
Byமாலை மலர்7 April 2022 3:55 PM IST (Updated: 7 April 2022 3:55 PM IST)
தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
தேவகோட்டை
தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி சாரதாநகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு விழா கடந்த 29ந்தேதி நவசக்திஹோமம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்புக்கட்டுதல் மாலை சக்திகரகம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது. ஒவ்வொருநாளும் அம்மனுக்கு மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஐஸ்வர்யா லட்சுமி, அங்காள பரமேஸ்வரி, கனகதுர்க்கை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கரகம், மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்-கடன் செலுத்தினர். மாலை-யில் கோவில்முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல்குத்தி பூக்குழி இறங்கினர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
X