search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடற்கரைசாலையில் காந்தி சிலை பின்புறம் நடுக்கடலில் ரசிகர்கள் வைத்துள்ள நடிகர் விஜய் பேனரை படத்தில் காணலாம்.
    X
    கடற்கரைசாலையில் காந்தி சிலை பின்புறம் நடுக்கடலில் ரசிகர்கள் வைத்துள்ள நடிகர் விஜய் பேனரை படத்தில் காணலாம்.

    பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்று புதுவையில் நடுக்கடலில் விஜய் பேனர்

    பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனார்.
    புதுச்சேரி:

    நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் 13-ந்தேதி வெளியாகிறது. திரைப்படத்தை வரவேற்று புதுவை நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் தங்களது விருப்பமான அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படங்களை அதில் இடம் பெறச்செய்துள்ளனர்.

    இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனார்.

    இதனை புதுவை கடற்கரையில் கூடும் சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி செல்வோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

    புதுவையில் கடற்கரை சாலை காந்தி சிலைக்கு பின்னால் கடலுக்கு நடுவில் உள்ள பழைய ரெயில்வே மரக்கட்டையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பேனர் வைப்பது ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.


    Next Story
    ×