என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் 3 நாட்களில் ரூ.300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு- கோவில் நிலம் மீட்பு
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக கோவில் நிலம் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளது.
இந்த இடங்களின் ஒரு பகுதியான மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம், சாலவான்குப்பம், சூலேரிக்காடு, நெம்மேலி, பேரூர், கிருஷ்ணன் காரணை, இளந்தோப்பு சாலையோரம் 37ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 30ந் தேதிக்குள் ஆக்ரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று வரை கடந்த 3 நாட்களில் சுமார் ரூ. 300கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை நவீன டிஜிட்டல் நிலஅளவை கருவி மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.