என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுகோள்

அவினாசி:
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என, முதல்வருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி, தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை தலைவர் நடராஜன்மு தல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் ,பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
எனவே அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பன்னாட்டு பல்பொருள் அங்காடிகளால் பல லட்சம் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால்இ த்தகைய பெரிய 'மால்'களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பலரை தற்கொலை செய்ய வைக்கும் ஆன்லைன்சூ தாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினர் மத்தியிலும், போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைய சமுதாயத்தினர் போதை பழக்கத்தில் இருந்து வெளியே வர, மது மற்றும் போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.