என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல்
Byமாலை மலர்28 May 2022 5:07 PM IST (Updated: 28 May 2022 5:07 PM IST)
சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமர் மனைவி சின்னப்பிள்ளை(40) தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரை கண்ட சின்னப்பிள்ளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சின்னப்பிள்ளையை தேடி வருகிறார்கள்.
Next Story
×
X