என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் போலி வாரிசு சான்றிதழ் தயாரித்த வாலிபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    X

    சேலத்தில் போலி வாரிசு சான்றிதழ் தயாரித்த வாலிபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    • அரசு வேலை கேட்டு விண்ணப்பித்தபோது குட்டு அம்பலமானது.
    • அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்தது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் தூய்மை பணியாளராக உமா என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    இவரது வாரிசு என கூறி, மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் அரசு வேலை கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளார்.

    அவர் சமர்ப்பித்த வாரிசு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சேலம் மேற்கு தாலுகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி அந்த சான்றிதழை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஆன்லைனில் பெறப்பட்டது போல போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்யப்பட்டது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் இது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.

    மேலும் பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் பரமேஸ்வரன் மீது போலி ஆவணத்தை உண்மை ஆவணமாக தாக்கல் செய்தது, அதை உண்மை ஆவணம் என நம்ப வைத்தது, மோசடி ஆகிய பிரிவுகளில் குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் கந்தவேல், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×