என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் சாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது

- போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர்.
- திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திண்டிவனம் போலீஸ் உதவி சுப்பிரண்டு அபிஷேக் குப்தாவிற்கு தகவல் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்ததில் சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 28), திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.