என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே நோய் கொடுமையால் 3 பேர் தற்கொலை
- நோய்கொடுமை, மனஉளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
- ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பொம்மைய கவுண்டன்பட்டி பஜார் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 62). இவருக்கு கடந்த 3 வருடமாக முதுகு தண்டு வட பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய் குணமாகாததால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போடி அம்மாபட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவருக்கு கடந்த சில நாட்களாக கையில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (46). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து திருப்பூரிலேயே தங்கி விட்டார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனால் ஆண்டிபட்டி வந்து ஆட்டோ ஓட்டி வந்தார். மனைவி பிரிந்த ஏக்கம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.