என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்8 Nov 2023 2:39 PM IST
- திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் நேற்று மாலை திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போ லீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆனத்தூர் காலனியை சேர்ந்த ரவி மகன் ஜான் என்கிற ராஜ் (வயது 19), சென்னை புழல் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அபினேஷ் (20), சந்திரசேகரன் மகன் சுபாஷ் (22) ஆகிய 3 பேரும் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துனர்.அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 3 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X