என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் 401 திருவிளக்கு பூஜை சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் 401 திருவிளக்கு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2023/05/29/1889216-1sivagirithiruvilakkupooja.webp)
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் 401 திருவிளக்கு பூஜை
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது.
- பெண்கள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்களை பாடினர்.
சிவகிரி:
சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் வருகிற 4 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1-ம் திருநாள் நடைபெற்றது. 2-ம் திருநாளான நேற்று இரவு 7 மணியளவில் திரவுபதி அம்மன் கோவிலில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 401 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சீதாராமன், பொருளாளர் சிதம்பரம் குருசாமி, துணைத்தலைவர் குமார், துணைச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதோஷ வழிபாட்டு குழுவை சேர்ந்த தலைவி சரஸ்வதி தலைமையில், தேவி, குழந்தை நாச்சியார், மீனா ஆகியோர் பக்தி பஜனை பாடல்கள் பாட திருவிளக்கு ஏற்றி பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை ஒன்று சேர்ந்து பாடி 401 திருவிளக்கு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவிழா நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.